குட்டிகளை முதுகில் சுமந்தபடி சாலையில் உலா வந்த கரடி; சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்


குட்டிகளை முதுகில் சுமந்தபடி சாலையில் உலா வந்த கரடி; சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
x

விக்கிரமசிங்கபுரத்தில் தனது 2 குட்டிகளை முதுகில் சுமந்தபடி கரடி ஒன்று சாலையில் உலா வந்தது. அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், மிளா உள்பட ஏராளமான வனவிலங்குள் உள்ளன, அவை அவ்வப்போது மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தியும், பொதுமக்களை அச்சுறுத்தியும் வருகின்றன.

கடந்த 4 நாட்களாக விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அகஸ்தியர்பட்டி பகுதியில் இரவு நேரங்களில் கரடி உலா வந்தது. அந்த கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அடையகருங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி கோரிக்கை வைத்தார். இதையடுத்து வனத்துறையினர் இரவு நேரங்களில் அகஸ்தியர்பட்டி, விநாயகர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விக்கிரமசிங்கபுரம் கோட்டைவிளைப்பட்டி-முதலியார்பட்டி இணைப்பு சாலையில் இரவு நேரத்தில் கரடி ஒன்று தனது 2 குட்டிகளை முதுகில் சுமந்தவாறு உலா வந்துள்ளது. இதை அந்த வழியாக சென்றவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து உள்ளனர். தற்போது அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குட்டிகளுடன் திரியும் கரடியால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாக அதை பிடிக்க வனத்துறையினர் உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.



Next Story