வங்கியில் இருக்கை வசதி தேவை


வங்கியில் இருக்கை வசதி தேவை
x

வங்கியில் இருக்கை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பிராமணர் தெருவில் உள்ள ஒரு அரசு வங்கியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள், முதியோர் உதவித்தொகைக்கு பணப் பட்டுவாடா செய்யப்படுகிறது. பணத்தைப் ெபற வருவோர் வங்கியின் வெளியே சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருக்கின்றனர்.

இதனால் வயது முதிர்ந்தவர்கள் நீண்ட நேரமாக வெயிலில் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அப்போது ஒரு சிலர் மயக்கம் அடைந்து கீழே விழுந்து விடுகிறார்கள். சிலருக்கு தலைச்சுற்றல் வருகிறது. எனவே உதவித்தொகை ெபற வருவோருக்கு வங்கியின் உள்ளே அல்லது வெளியே இருக்கை வசதி அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story