சாலையில் உலா வந்த காட்டெருமை


சாலையில் உலா வந்த காட்டெருமை
x

கொடைக்கானலில் சாலையில் காட்டெருமை உலா வந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

திண்டுக்கல்

கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டெருமை, காட்டுப்பன்றிகள், மான், குரங்கு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. அதில், காட்டெருமை, குரங்குகள் அடிக்கடி நகர் பகுதிக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. மேலும் அவற்றால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருந்தது. இதற்கிடையே கே.ஆர்.ஆர். கலையரங்கம் பகுதியில் மதிய நேரத்தில் பெரிய காட்டெருமை ஒன்று சாலையில் உலா வந்தது. இதனை பார்த்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சிலர் காட்டெருமையை அருகில் இருந்த தோட்ட பகுதிக்குள் விரட்டினர். அதன்பின்னரே சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், நகர்ப்பகுதிக்குள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் குரங்கு, காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் அடிக்கடி உலா வருகின்றன. எனவே அவற்றை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story