கிணற்றுக்குள் விழுந்த காட்டெருமை உயிருடன் மீட்பு


கிணற்றுக்குள் விழுந்த காட்டெருமை உயிருடன் மீட்பு
x

கிணற்றுக்குள் விழுந்த காட்டெருமை உயிருடன் மீட்கப்பட்டது.

திருச்சி

துவரங்குறிச்சியை அடுத்த தெத்தூர் அருகே மலையாண்டி கோவில்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் காட்டெருமை தவறி விழுந்து கத்திக்கொண்டு இருந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் துவரங்குறிச்சி வனத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் கிணற்றில் இறங்கி காட்டெருமையை மீட்டால் தங்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என கருதிய தீயணைப்பு துறையினர் கிணற்றின் ஒரு பகுதியில் துளையிட்டு மீட்க முடிவு செய்தனர். அதன்பேரில் கிணற்றின் ஒருபகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் துளையிட்டு காட்டெருமையை மீட்டனர். பின்னர் அதனை வனப்பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story