வாலிபர் கொலையில் சிறுவன் உள்படமேலும் 3 பேர் கைது


தினத்தந்தி 20 April 2023 12:15 AM IST (Updated: 20 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே வாலிபர் கொலையில் சிறுவன் உள்பட மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே வாலிபர் கொலையில் சிறுவன் உள்பட மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாலிபர் கொலை

ஆலங்குளம் அருகே வடக்கு கிடாரகுளம் மேற்கு தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி மகன் மணிகண்டன் (வயது 25). ஜே.சி.பி. டிரைவரான இவர் ஒரு வழக்கு சம்பந்தமாக கடந்த 17-ந் தேதி தென்காசி கோர்ட்டில் ஆஜராகி விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தபோது கிடாரகுளம் அருகே படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரை சேர்ந்த இசக்கிமுத்து, இசக்கி பாண்டி, ரமேஷ் ஆகிய 3 பேர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கோா்ட்டில் சரணடைய வந்தபோது அவர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மேலும் 3 பேர் கைது

இந்த நிலையில் நெட்டூர் சாலை கோவில் தெருவை சேர்ந்த முத்தையா மகன் அப்ரானந்தம் என்ற அப்பு, காந்திமதி தெருவை சேர்ந்த சண்முகையா மகன் அய்யப்பன் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

பின்னர் அப்ரானந்தம், அய்யப்பன், இசக்கிமுத்து, இசக்கிபாண்டி, ரமேஷ் ஆகிய 5 பேரை ஆலங்குளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். சிறுவனை நெல்லை இளஞ்சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாங்குநேரி சிறையில் அடைத்தனர். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story