ஏரியில் பாய்ந்தோடும் நீரில் சைக்கிள் ஓட்டிய சிறுவன்


ஏரியில் பாய்ந்தோடும் நீரில் சைக்கிள் ஓட்டிய சிறுவன்
x

ஏரியில் பாய்ந்தோடும் நீரில் சிறுவன் சைக்கிள் ஓட்டினான்.

திருச்சி

துறையூர்:

துறையூரில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் துறையூரை சுற்றியுள்ள கிராமங்களில் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இதேபோல் துறையூரில் உள்ள பெரிய ஏரியும் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் சில சிறுவர்கள் மற்றும் பொதுமக்களில் சிலர் விபரீதத்தை உணராமல், மேற்பகுதியில் இருந்து ஏரியில் குதித்து நீச்சல் அடிக்கின்றனர். நேற்று ஒரு சிறுவன் ஏரியில் இருந்து பாய்ந்து வெளியேறும் தண்ணீரில் சைக்கிள் ஓட்டிச்சென்றான். இது பற்றிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், நாளுக்கு நாள் பெரிய ஏரியில் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது. விபரீதம் தெரியாமல் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் ஏரியில் குதித்து குளித்தும், சைக்கிள் ஓட்டியும் வருகிறார்கள். உயிர்ப்பலி ஏற்படும் முன்பு, அந்த பகுதிக்கு பொதுமக்கள் செல்வதை துறையூர் நகராட்சி தடை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story