கடையில் புகுந்து செல்போன் திருடிய சிறுவன்


கடையில் புகுந்து செல்போன் திருடிய சிறுவன்
x

சிவகாசியில் கடையில் புகுந்து சிறுவன் செல்போன் திருடினான்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி புதுத்தெருவில் உள்ள ஒரு செல்போன் கடைக்கு சம்பவத்தன்று காலையில் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் வந்துள்ளான். அந்த சிறுவன் செல்போன் கடையில் பணியாற்றும் பெண் ஊழியரின் செல்போனை எடுத்துக் கொண்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் சம்பவம் நடைபெற்ற கடைக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். செல்போன் கடையில் புகுந்து சிறுவன் செல்போன் திருடி செல்லும் காட்சி சமூக வலை தளங்களில் பரவலாகி வருகிறது.



Next Story