மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது


மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது
x

தண்டராம்பட்டு அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

தண்டராம்பட்டு

தண்டராம்பட்டு அருகே தலையாம்பள்ளம் ஊராட்சியை சேர்ந்த 15 வயது மாணவி அதே பகுதியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் ஜான்சன் (வயது 24) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் தாய் தண்டராம்பட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நிர்மலா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜான்சனை கைது செய்தார்.

பின்னர் அவரை போலீசார் தண்டராம்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Related Tags :
Next Story