அரசு பஸ் மோதி வாலிபரின் கால் துண்டானது
அரசு பஸ் மோதி வாலிபரின் கால் துண்டானது.
திருச்சி மத்திய பஸ்நிலையத்தில் இருந்து சத்திரம் பஸ்நிலையம் நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று காலை சென்று கொண்டிருந்தது. ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே வந்தபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மன்னார்புரம் புதிய காலனியை சேர்ந்த செல்வத்தின் மகன் லோகேஸ்வரன்(வயது 19) மீது பஸ் மோதியது. மேலும் மோட்டார் சைக்கிளுடன் சில அடி தூரம் இழுத்து செல்லப்பட்டதில், அவர் பஸ்சின் அடியில் சிக்கினார். மேலும் அவருடைய 2 கால்கள் மீதும் பஸ் சக்கரம் ஏறியது. இதில் ஒரு கால் பாதப்பகுதி சக்கரத்தில் சிக்கி நசுங்கி துண்டானது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.