சதுரகிரிக்கு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்


சதுரகிரிக்கு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்
x

சதுரகிரிக்கு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்கிறது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

சதுரகிரி கோவிலுக்கு மலையேறி செல்லும் பக்தர்கள் வசதிக்காக மலைப்பாதையில் 5 இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டிகளுக்கு தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து குடிநீர் கொண்டு செல்லும் குழாயில், பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் மலைக்கு குடிநீர் செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் பக்தர்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். அடுத்த மாதம் ஆடி அமாவாசை திருவிழாவில் ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்வர். ஆதலால் குழாயில் உள்ள உடைப்பை சரி செய்து, மலையேறும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story