பள்ளி கட்டிடம் கட்ட பள்ளம் தோண்டியபோது புத்தர் சிலை கண்டெடுப்பு


பள்ளி கட்டிடம் கட்ட பள்ளம் தோண்டியபோது புத்தர் சிலை கண்டெடுப்பு
x

மீஞ்சூர் அருகே பள்ளி கட்டிடம் கட்ட பள்ளம் தோண்டியபோது புத்தர் சிலை கண்டெடுப்பு.

மீஞ்சூர்,

மீஞ்சூர் அருகே உள்ள தேவதானம் ஊராட்சியில் அடங்கியது குமரசிறுளப்பாக்கம் கிராமம். இங்கு தமிழக அரசின் பள்ளிகல்வி துறையில் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி கட்டிடம் பழமையானதால் அரசு உத்தரவின் பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டது. மீண்டும் அதே பகுதியில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இந்தநிலையில் பெக்லைன் எந்திரம் உதவியுடன் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது மண்ணில் மர்மமான பொருள் இருப்பது தெரியவந்தது. அதனை சுத்தப்படுத்தியபோது அது பழங்கால புத்தர் சிலை என்பது தெரியவந்தது. தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். பின்னர் இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிஎட்டியப்பன் கிராம மக்கள் முன்னிலையில் பொன்னேரி தாசில்தாரிடம் புத்தர் சிலையை ஒப்படைத்தார்.

1 More update

Next Story