கிணற்றில் குதித்து கட்டிட மேஸ்திரி தற்கொலை


கிணற்றில் குதித்து கட்டிட மேஸ்திரி தற்கொலை
x

கிணற்றில் குதித்து கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

ஓமலூர்:-

ஓமலூரை அடுத்த சக்கரைசெட்டிப்பட்டி வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 31). கட்டிட மேஸ்திரி இவருடைய மனைவி வனிதா (23). இந்த தம்பதிக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக வனிதா கோபித்து கொண்டு தேக்கம்பட்டி கொல்லப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு குழந்தையுடன் சென்று விட்டார்.

அவரை சமாதானப்படுத்தி அழைத்து வர பார்த்திபன் அங்கு சென்றார். மேலும் குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு, பெயர் பட்டியலை தயார் செய்து அதனை எடுத்து சென்றார். அப்போது அங்கு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் வனிதா குடும்பம் நடத்த வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையுடன் பார்த்திபன் வீட்டுக்கு திரும்பினார். பின்னர் அவர் அங்குள்ள கிணற்றில் குதித்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓமலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, கிணற்றில் குதித்த பார்த்திபனை ஒரு மணி நேரத்துக்கு பிறகு பிணமாக மீட்டனர். ஓமலூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story