மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்கும் முகாம்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய அளவில் தனித்துவமான அடையாள அட்டை வழங்கும் முகாம் தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமை மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு மாற்றுத்திறனுடைய மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்க பரிந்துரை செய்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. முகாமில் கலந்து கொண்ட பயனாளர்களுக்கு ஆதார் அட்டை எடுத்தல், இலவச ெரயில் பயண அடையாள அட்டை விண்ணப்பம் செய்தல், இலவச பஸ் பயண அடையாள அட்டை விண்ணப்பம் செய்தல் போன்றவற்றுக்கான ஏற்பாடுகள் முகாம் நடைபெற்ற இடத்திலேயே செய்யப்பட்டிருந்தன. முகாமில் 103 மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு துணைக்கருவிகள் வழங்கப்பட்டன. முகாமில் கலந்து கொண்ட பயனாளர்களுக்கு ஏற்கனவே காப்பீடு செய்யப்பட்ட அனைவருக்கும் காப்பீடு புதுப்பித்து வழங்கப்பட்டது. புதிதாக 16 பயனாளர்களுக்கு காப்பீடு செய்து தரப்பட்டது.