சங்கராபுரம் ஒன்றியத்தில்மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாம்வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
சங்கராபுரம் ஒன்றியத்தில் மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது.
மூங்கில்துறைப்பட்டு, மே.22-
சங்கராபுரம் ஒன்றியம் புதுப்பட்டு, ரங்கப்பனூர், லக்கிநாயக்கன்பட்டி, புளியங்கோட்டை, பிரம்மகுண்டம், ராவத்தநல்லூர், வடகீரனூர், மேல்சிறுவள்ளூர், மூங்கில்துறைப்பட்டு ஆகிய ஊராட்சியில் மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம் அந்தந்த கிராமத்தில் நடைபெற்றது.
இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் தலைமை தாங்கினார். கோட்டாட்சியர் பவித்ரா, தாசில்தார் சரவணன், சங்கராபுரம் வடக்கு தி.மு.க ஒன்றிய செயலாளர் வக்கீல் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று பேசுகையில், கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலை மூங்கில்துறைப்பட்டு பகுதியில் பல ஆண்டுகளாக பட்டா இல்லாமல் வசிக்கும் பொது மக்களின் குடியிருப்பு பகுதிகளை ஆய்வு செய்து, பட்டா வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இங்கு பெறப்பட்ட மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
இந்த முகாம்களில் சுமார் 7 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டது. இதில் வடபொன்பரப்பி வருவாய் ஆய்வாளர் நிறைமதி, கிராம நிர்வாக அலுவலர் முருகன், ஒன்றிய குழு துணை தலைவர் அஞ்சலை கோவிந்தராஜ், மாவட்ட கவுன்சிலர் அஸ்வினி, செந்தில்குமார், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் விசய்ஆனந்த், ஊராட்சி மன்ற தலைவர்கள் ரங்கப்பனூர் அர்ச்சனா காமராஜன், புதுப்பட்டு சித்ராதாஸ், மூங்கில்துறைப்பட்டு பரமசிவம், மேல்சிறுவள்ளூர் செல்வராஜ், உலகளாபாடி பிலோமினாள் இருதயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.