புகையிலை பொருட்கள் கடத்தி வந்த கார் கவிழ்ந்து விபத்து


புகையிலை பொருட்கள் கடத்தி வந்த கார் கவிழ்ந்து விபத்து
x

ரத்தினகிரி அருகே புகையிலை பொருட்கள் கடத்தி வந்த கார் கவிழ்ந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி தனியார் பள்ளி அருகே பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் விபத்துக்குள்ளானது. காரை ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பார்த்த போது, காரில் தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்கள் இருப்பதை கண்டனர். இதுகுறித்து ரத்தனகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கார் மற்றும் காரில் இருந்த 13 மூட்டை புகையிலையை பறிமுதல் செய்தனர். புகையிலை பொருட்கள் எங்கிருந்து கடத்தப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story