ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் தீப்பிடித்தது


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் தீப்பிடித்தது
x

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் தீப்பிடித்த விபத்தில் புது மாப்பிள்ளை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் தீப்பிடித்த விபத்தில் புது மாப்பிள்ளை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

கார் தீப்பிடித்தது

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 26). இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் ராஜபாளையத்திற்கு தனது உறவினர் வீட்டிற்கு தனது காரில் வந்தார்.

மதுரை ரோட்டில் கிருஷ்ணன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது காரில் இருந்து புகை வந்ததால் காரை ஓரமாக நிறுத்தினார். இந்தநிலையில் திடீரென கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

உயிர் தப்பினர்

இதில் அவர்கள் காரில் இருந்து இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணன் கோவில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story