மரத்தில் கார் மோதி விபத்து; 5 பேர் படுகாயம்

மரத்தில் கார் மோதி 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
ராமநாதபுரம்
தொண்டி,
திருவாடானை அரசு ஆஸ்பத்திரி முன்பு நேற்று மதியம் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரம் நின்ற மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியவாறு வேகமாக சென்று ஆஸ்பத்திரி முன்பு இருந்த மரத்தின் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் காரை ஓட்டி சென்ற குருந்தனக்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம்(வயது 65), அவரது மனைவி ராஜேஸ்வரி(60), வளர்மதி(44), சாலையோரம் நின்று கொண்டிருந்த திருவாடனையை சேர்ந்த வடிவேல்(50), மலைராஜ்(55) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களுக்கு திருவாடானை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்தில் காரும், 4 மோட்டார்சைக்கிள்களும் சேதம் அடைந்தன. இது தொடர்பாக திருவாடானை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






