மொபட் மீது கார் மோதிஆடு வியாபாரி பலி


மொபட் மீது கார் மோதிஆடு வியாபாரி பலி
x

மல்லசமுத்திரம் அருகே மொபட் மீது கார் மோதியதில் ஆடு வியாபாரி உயிரிழந்தார்.

நாமக்கல்

திருச்செங்கோடு

ஆடு வியாபாரி

மல்லசமுத்திரம் அருகே, கூத்தாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கந்தசாமி (வயது 42), அதே பகுதியை சேர்ந்தவர் சின்னமுத்து (71). ஆடு வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஆடு வாங்க திருச்செங்கோடு நோக்கி தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தனர்.

மோர்பாளையம் அடுத்த ஆஞ்சநேயர்கோவில் அருகே அவர்கள் மொபட்டில் சாலையை கடக்க முயன்றனர். அப்போது திருச்செங்கோட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் கந்தசாமி, சின்னமுத்து ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவர்கள் இருவரையும் காப்பாற்றி சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பலி

அங்கு சிகிச்சை பெற்று வந்த சின்னமுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மற்றொருவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story