மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிவிசைத்தறி உரிமையாளர் பலி
குமாரபாளையத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விசைத்தறி உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.
குமாரபாளையம்
விசைத்தறி உரிமையாளர்
திருச்செங்கோடு சாணார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (வயது 60). விசைத்தறி உரிமையாளர். இவரது மனைவி சரஸ்வதி. இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் குமாரபாளையம் அருகே உள்ள கத்தேரியில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு சென்றனர். குமாரபாளையம் அருகே உள்ள வளையக்காரனூர் பஸ் நிறுத்தம் பகுதியில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்றனர்.
அப்போது அந்த வழியாக சேலத்தில் இருந்து கோவை நோக்கி நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சம்பத்தை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணை
ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இவரது மனைவி சரஸ்வதி படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்க்ள. மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய கார் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.