பஸ் இடித்ததில் கரும்பு தோட்டத்தில் இறங்கிய கார்


பஸ் இடித்ததில் கரும்பு தோட்டத்தில் இறங்கிய கார்
x

வந்தவாசி அருகே பஸ் இடித்ததில் கரும்பு தோட்டத்தில் கார் இறங்கியது

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசியில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது.

அதேபோல் தனியார் கம்பெனி பஸ் காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்தது. வந்தவாசி - காஞ்சீபுரம் சாலையில், தாழம்பள்ளம் கூட்ரோடு அருகில் காரின் டிரைவர் முன்னால் சென்று கொண்டிருந்த பஸ்சை வலது பக்கமாக கடக்க முயன்றார்.

அப்போது பக்கவாட்டில் பஸ் இடித்ததில் கார் அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் இறங்கிவிட்டது,

காரில் 2 குழந்தைகள், கணவன், மனைவி சென்றனர். இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினர்.


Next Story