சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார்


சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார்
x
தினத்தந்தி 14 Dec 2022 12:30 AM IST (Updated: 14 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

தேவதானப்பட்டி அருகே சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கார் கவிழ்ந்து 6 அய்யப்ப பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.

தேனி

விழுப்புரத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் ஒரு காரில், கேரள மாநிலம் சபரிமலைக்கு சென்று விட்டு நேற்று ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை, அதே ஊரை சேர்ந்த ரமேஷ் (வயது 30) என்பவர் ஓட்டினார். பெரியகுளம்-வத்தலக்குண்டு மெயின் ரோட்டில் கார் வந்து கொண்டிருந்தது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே செங்குளத்துப்பட்டி என்ற இடத்தில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இதில் காரில் பயணம் செய்த அய்யப்ப பக்தர்களான விழுப்புரத்தை சேர்ந்த முருகதாஸ் (41), ராஜவேல் (35), குமரகுரு (22), ஆறுமுகம் (51), சுரேஷ் (25), வீரப்பன் (39) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story