நடுரோட்டில் கார் கவிழ்ந்து விபத்து


நடுரோட்டில் கார் கவிழ்ந்து விபத்து
x
தினத்தந்தி 18 March 2023 6:45 PM GMT (Updated: 2023-03-19T00:17:17+05:30)

நடுரோட்டில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

நீலகிரி

கூடலூர்

ஊட்டியில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் கூடலூர் நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது மேல் கூடலூர் தாலுகா தலைமை ஆஸ்பத்திரியை கடந்து சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து வலது புறம் உள்ள மின் கம்பத்தில் கார் மோதியது. பின்னர் நடுரோட்டில் கவிழ்ந்தது. இதனால் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

பின்னர் காருக்குள் சிக்கியிருந்த 2 பேரை பாதுகாப்பாக மீட்டனர். தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரியை சேர்ந்த 2 பேர் கோவையில் ஸ்டூடியோ நடத்தி வருவதாகவும், காரில் கூடலூர் வழியாக சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த போது தூக்க கலக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதும் தெரிய வந்தது. மேலும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் 2 பேரும் உயிர் தப்பினர்.


Next Story