தாறுமாறாக ஓடிய கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது


தாறுமாறாக ஓடிய கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடி அருகே தாறுமாறாக ஓடிய கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கொத்தனார் பரிதாபமாக இறந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

ராமநாதபுரம்

பரமக்குடி,

பரமக்குடி அருகே தாறுமாறாக ஓடிய கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கொத்தனார் பரிதாபமாக இறந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தாறுமாறாக ஓடிய கார்

பரமக்குடி அருகே உள்ள தினைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் போஸ் (வயது 41). இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.இந்நிலையில் சம்பவத்தன்று போஸ் அவரது காரை வேந்தோணி நான்கு வழிச்சாலையில் ஓட்டி சென்றார். அப்போது அந்த கார் நிலை தடுமாறி சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவர் மீது மோதியது.

பின்பு சாலையோரம் நின்று கொண்டிருந்த மற்றொரு காரின் மீது மோதியது. இதில் காருக்குள் இந்த கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (38) மற்றும் கார் டிரைவர் கோவிந்தராஜன் (25) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.

கொத்தனார் சாவு

பின்பு தொடர்ந்து போஸ் ஓட்டி வந்த கார் நிற்காமல் எதிரே வந்த முதுகுளத்தூர் தாலுகா சாம்பக்குளம் அருகே உள்ள பொதிகால் கிராமத்தைச் சேர்ந்த கொத்தனார் முத்துவேல் (67) என்பவர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முத்துவேல் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து முத்துவேலின் மகன் முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் பரமக்குடி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல்ராஜ்குமார், காரை ஓட்டி வந்த போஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story