வாழைத்தார்களை ஏற்றி வந்த சரக்கு ஆட்டோ கவிழ்ந்தது
நெமிலி அருகே வாழைத்தார்களை ஏற்றி வந்த சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ராணிப்பேட்டை
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், ராஜம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்புராயுடு. இவர் வாழைப்பழம் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான லோடு ஆட்டோ ஒன்று ராஜம்பேட்டையில் இருந்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நோக்கி வாழைத்தார்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.
இந்த நிலையில் நெமிலி அருகே சேந்தமங்கலம் பகுதியில் அரக்கோணம்-காஞ்சீபுரம் சாலையில் செல்லும் போது எதிர்பாராதவிதமாக காஞ்சீபுரத்தில் இருந்து அரக்கோணம் நோக்கி செல்லும் பால் வேன் மீது உரசி ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் வாழைத்தார்கள் சாலையில் விழுந்தது.
விபத்து குறித்து தகவலறிந்த நெமிலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவிழ்ந்து கிடந்த ஆட்டோவை அப்புறப்படுத்தினர். மேலும் இதுகுறித்து நெமிலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story