வைக்கோல் கட்டுகள் ஏற்றி வந்த சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்தது


வைக்கோல் கட்டுகள் ஏற்றி வந்த சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்தது
x

வைக்கோல் கட்டுகள் ஏற்றி வந்த சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்தது.

திருச்சி

கொள்ளிடம் டோல்கேட்:

தஞ்சாவூரில் இருந்து திருச்சி வழியாக பெரம்பலூருக்கு வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. சரக்கு வேனை தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள கலஞ்சேரியை சேர்ந்த புலேந்திரனின் மகன் குமரவேல்(21) ஓட்டினார். திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் குமரவேல் காயமின்றி உயிர் தப்பினர். ஆனால் வைக்கோல் கட்டுகள் சாலையில் சிதறி கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரேன் எந்திரம் மூலம் சரக்கு வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

1 More update

Next Story