'சேஸ்' முறிந்து நடுரோட்டில் நின்ற சரக்கு வேன்


சேஸ் முறிந்து நடுரோட்டில் நின்ற சரக்கு வேன்
x

வேகத்தடையில் ஏறி இறங்கியபோது ‘சேஸ்’ முறிந்து நடுரோட்டில் சரக்கு வேன் நின்றது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடியில் இருந்து, கூவக்காபட்டிக்கு கோவில் திருவிழாவுக்கு பந்தல் அமைக்கும் பணிக்காக பொருட்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று சென்றது. அதனை மாரம்பாடியை சேர்ந்த அருள்குமார் (வயது 22) ஓட்டினார். வேடசந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வேகத்தடையில் சரக்கு வேன் ஏறி இறங்கியது. அப்போது, வேனின் முன்பக்க சேஸ் முறிந்தது. இதனால் வேனின் மையப்பகுதி மேல்நோக்கி உயர்ந்தது. வேனில் இருந்த இரும்பு கம்பியும் உயரத்துக்கு சென்றது. நடுரோட்டில் நின்ற சரக்கு வேனை அந்த இடத்தில் இருந்து நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டது. அதிக பாரம் ஏற்றியதால் சேஸ் உடைந்து போய் இருப்பது தெரியவந்தது. சரக்குவேனின் பின்னால் எந்தவொரு வாகனமும் வராததால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதற்கிடையே சரக்கு வேனில் ஏற்றி வந்த பந்தல் உபகரணங்கள், மற்றொரு வாகனத்தில் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.


Next Story