பள்ளி மாணவரை தாக்கிய 5 பேர் மீது வழக்கு


பள்ளி மாணவரை தாக்கிய 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 6 Oct 2023 12:15 AM IST (Updated: 6 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே பள்ளி மாணவரை தாக்கிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம்


விழுப்புரம் அருகே உள்ள சோழகனூரை சேர்ந்தவர் சிவசங்கர் மகன் சந்தோஷ் (வயது 16). இவர் திருவாமாத்தூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த 20-ந் தேதி நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது சந்தோஷ் தரப்புக்கும், அதே கிராமத்தை சேர்ந்த இளங்கோ தரப்புக்கும் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் சந்தோஷ், திருவாமாத்தூரில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடைக்கு சென்றபோது அவரை இளங்கோ, ரஞ்சித், சரத்குமார், அருண், ஆனந்த் ஆகியோர் சேர்ந்து திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சந்தோஷ், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சந்தோஷ், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இளங்கோ உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story