வாலிபரை கத்தியால் கீறிய 5 பேர் மீது வழக்கு
வாலிபரை கத்தியால் கீறிய 5 பேர் மீது வழக்கு
விருதுநகர் முத்துராமன்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார்(வயது 27). இவரை அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் அழைத்ததின்பேரில் அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள பழைய பர்மா கடை முன்பு அருண்குமார் வந்தார். அப்போது சக்திவேல், துரைப்பாண்டி, முத்துராமன்பட்டியை சேர்ந்த பேச்சிமுத்து(29), அல்லம்பட்டியை சேர்ந்த வசீகரன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரும் சேர்ந்து அருண்குமாரின் இரு கன்னங்களிலும் கத்தியால் கீறி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
படுகாயமடைந்த அருண்குமார் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் பேச்சிமுத்து உள்பட 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதைதொடர்ந்து வசீகரன் தன்னையும் பேச்சிமுத்துவையும், அருண்குமார் தாக்கியதாக கொடுத்த புகாரின் பேரில் அருண்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.