மாணவியை தாக்கிய மாணவர் மீது வழக்கு


மாணவியை தாக்கிய மாணவர் மீது வழக்கு
x

புத்தூர் கல்லூாியில் மாணவியை தாக்கிய மாணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மயிலாடுதுறை

கொள்ளிடம்;

கொள்ளிடம் அருகே புத்தூரில் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. நேற்று இக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவி, அவரது சக மாணவர்களுடன் கல்லூரி மேல் தளத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார். இதைக்கண்ட அதே கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவர், தன்னைப் பார்த்து தான் கேலி கிண்டல் செய்து பேசி சிரிக்கிறார்கள் என நினைத்து ஓடி சென்று மாணவியின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி கொள்ளிடம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story