வாலிபர் மீது வழக்கு


வாலிபர் மீது வழக்கு
x

`வாட்ஸ்-அப்'பில் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

திருநெல்வேலி

பேட்டை:

சுத்தமல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் கல்லூர் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த நபர் தனது `வாட்ஸ்-அப்'பில் இரண்டு சமுதாயங்களை பற்றி கூறி இரு தரப்பினரிடையே மோதலை உருவாக்கும் விதமாக மிரட்டல் விடுத்த `வாட்ஸ்-அப்' ஆடியோ பதிவை சப்-இன்ஸ்பெக்டரிடம் தெரியப்படுத்தினார்.

இதனை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டதில் பதிவை பதிவிட்டது தென்காசி மாவட்டம் ஊத்துமலையை சேர்ந்த பரமசிவன் மகன் ஜோதிமணி (வயது 22) என்பது தெரிய வந்தது.

இதுதொடர்பாக சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து இரு சமுதாயத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக அவதூறாக பேசி `வாட்ஸ்-அப்' மூலம் மிரட்டல் விடுத்த அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.


Next Story