பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு


பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு
x

களக்காடு அருகே பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே உள்ள கீழ உப்பூரணி, தெற்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன் மனைவி செல்வகனி (வயது 53). இவரது கணவர் நடராஜன் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இதனால் செல்வகனி கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த திரவியக்கனி மனைவி நீலாவதிக்கும் இடையே இடத்தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று நீலாவதி பிரச்சினைக்குரிய இடத்தில் அதிகாரிகள் அளவீடு செய்து நடப்பட்டிருந்த கல்லை அகற்றினார். இதைப்பார்த்த செல்வகனி தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஆத்திரம் அடைந்த நீலாவதியும், அவரது கணவர் திரவியக்கனியும் சேர்ந்து செல்வகனியை செங்கலால் தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதில் காயமடைந்த செல்வகனி நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றிய புகாரின் களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து நீலாவதியையும், அவரது கணவர் திரவியக்கனியையும் தேடி வருகிறார்.


Related Tags :
Next Story