தொழிலதிபரை தாக்கியவர் மீது வழக்கு


தொழிலதிபரை தாக்கியவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 2 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-03T00:16:53+05:30)

தொழிலதிபரை தாக்கியவர் மீது வழக்கு

கன்னியாகுமரி

புதுக்கடை:

புதுக்கடை அருகே உள்ள பண்டாரப்பரம்பு பகுதியை சேர்ந்தவர் குமரன் (வயது 62). இவர் சென்னையில் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சசிதரன் மகன் வினில். இவர் போக்குவரத்து துறையில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த பண்டார பரம்பு இசக்கியம்மன் கோவில் திருவிழா சம்பந்தமாக தொழிலதிபரான குமரனுக்கும், வினிலுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சம்பவத்தன்று கோவில் அருகே சென்ற போது குமரனை திடீரென கம்பியால் வினில் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த குமரன் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story