பொள்ளாச்சியில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக பா.ஜனதா பிரமுகர்கள் 3 பேர் மீது வழக்கு


பொள்ளாச்சியில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக பா.ஜனதா பிரமுகர்கள் 3 பேர் மீது வழக்கு
x

பொள்ளாச்சியில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக பா.ஜனதா பிரமுகர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக பா.ஜனதா பிரமுகர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிலை ஊர்வலம்

நாடு முழுவதும் கடந்த 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்த நிலையில் பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரன்பட்டியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை இந்து அமைப்பினர் ஊர்வலமாக நேற்று முன்தினம் எடுத்து வந்தனர்.

அப்போது அந்த பகுதியில் உள்ள மசூதியில் தொழுகைக்கு இடையூறாக அவர்கள் மேளம் அடித்துக் கொண்டு வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக இருதரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து ஊர்வலத்தை அனுப்பி வைத்தனர்.

சாலை மறியல்

இதை தொடர்ந்து இஸ்லாமிய அமைப்பினர் கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்ய தாமதப்படுத்தியதால் ஆத்திரத்தில் அவர்கள் உடுமலை ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு தீபசுஜிதா மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் வழக்குப்பதிவு செய்யாமல் மறியலை கைவிட மாட்டோம் என்று தெரிவித்தனர். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு போராட்டத்தை கைவிட்டனர். இதன் காரணமாக உடுமலை ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து பா.ஜனதா பிரமுகர்களான ஆனந்தன், நாராயணமூர்த்தி, லட்சுமணன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story