அக்காள்- தங்கை 3 பேர் மீது வழக்குப்பதிவு


அக்காள்- தங்கை 3 பேர் மீது வழக்குப்பதிவு
x

அக்காள்- தங்கை 3 பேர் மீது வழக்குப்பதிவு

ராணிப்பேட்டை

கேத்தாண்டபட்டி சின்ன கண்ணன் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம். இவரது மனைவி சத்யா (வயது 34). இவர் தனது சகோதரி ராஜேஸ்வரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டது. இதனால் மற்றொரு சகோதரியான சுந்தரி, தனது தங்கை ராஜேஸ்வரிக்கு சேர வேண்டிய பணத்தை திருப்பி தருமாறு சத்யாவிடம் கேட்டுள்ளார்.

சத்யா நேற்று ராஜேஸ்வரிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை சுந்தரி மூலம் திருப்பி கொடுத்துள்ளார் அப்போது ராஜேஸ்வரி அவரது கணவர் பாக்யராஜ் இருவரும் ரூ.2½ லட்சத்திற்குரிய வட்டியை கேட்டனர். இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ராஜேஸ்வரி மற்றும் அவரது கணவர் பாக்யராஜ் ஆகிய இருவரும் சத்யாவை தகாத வார்த்தைகளால் திட்டி சிறிய கத்தியால் தாக்கி உள்ளனர். இதனை தடுக்கச் சென்ற சுந்தரியின் தலையிலும் காயம் ஏற்பட்டது படுகாயம் அடைந்த சத்யா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கும், சுந்தரி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல் ராஜோஸ்வரியை தாக்கியதால் படுகாயம் அடைந்த ராஜேஸ்வரி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். இது குறித்து இருதரப்பினரும் அளித்த புகாரின்பேரில் ராஜேஸ்வரி மற்றும் இவரது கணவர் பாக்யராஜ், சத்யா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story