மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு


மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
x

மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி விவசாயியிடம் பணம் பெற்று மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கரூர்

மின்வாரியத்தில் வேலை

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள குரும்பபட்டியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 63). விவசாயி. இவரது 2-வது மகன் சிவசெல்வன். இவர் பி.இ. படித்து முடித்துள்ளார். இந்தநிலையில் சென்னையை சேர்ந்த முத்து குரும்பட்டியை சேர்ந்த சண்முகவேல் மற்றும் அவரது மனைவி விஜயா ஆகியோர் கடந்த 2018-ம் ஆண்டு பெரியசாமியை சந்தித்து உங்களது 2-வது மகனுக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.15 லட்சம் வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இதனையடுத்து பெரியசாமி ரூ.4 லட்சத்தை முத்துஎன்பவரிடம் கொடுத்ததுடன், ரூ.8 லட்சத்து 50 ஆயிரத்தை தனியார் வங்கியில் முத்துவின் கணக்கில் செலுத்தியுள்ளார்.

3 பேர் மீது வழக்கு

இதனையடுத்து பணத்தை எடுத்து கொண்ட 3 பேரும், பெரியசாமியின் மகனுக்கு வேலை வாங்கி தரவில்லை. இதனையடுத்து பெரியசாமி தனது மகனுக்கு வேலை வாங்கி தாருங்கள் இல்லாவிட்டால் பணத்தை தாருங்கள் என கூறியுள்ளார். இருப்பினும் அவர்கள் வேலையும் வாங்கி தராமலும், பணத்தையும் திருப்பித் தராமலும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து பெரியசாமி கரூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், முத்து, சண்முகவேல், விஜயா ஆகிய 3 பேர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story