அண்ணாமலை மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு


அண்ணாமலை மீது  6 பிரிவுகளில் வழக்கு பதிவு
x
தினத்தந்தி 2 Nov 2022 9:40 AM IST (Updated: 2 Nov 2022 11:03 AM IST)
t-max-icont-min-icon

மேலும் 370 பாஜகவினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

திமுக நிர்வாகி சைதை சாதிக் கடந்த சில நாட்களுக்கு முன் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் குஷ்பு குறித்து ஆபாசமாக பேசினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சைதை சாதிக் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், சைதை சாதிக் பேச்சை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார்

இந்த ஆர்ப்பாட்டம் அனுமதியின்றி நடைபெற்றதால் பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மகளிரணி நிவாகிகளை போலீசார் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் அண்ணாமலை மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும் 370 பாஜகவினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story