பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்குப்பதிவு
பண்ருட்டி அருகே பெண்ணை தாக்கிய தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்
பண்ருட்டி
பண்ருட்டி அருகே உள்ள நெல்லித்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் இளஞ்செழியன் (வயது 38). இவரது மனைவி ஆனந்த வள்ளி(32). இவர்கள் குடும்பத்திற்கும் இதே ஊரை சேர்ந்த கார்த்திகேயன்(28) என்பவரின் குடும்பத்தினருக்கும் ஏற்கனவே நிலப்பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று காலை ஆனந்தவள்ளி அவரது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ரதிமீனா(23) ஆகிய இருவரும் சேர்ந்து ஆனந்தவள்ளியை அசிங்கமாக திட்டி, அவரது தலைமுடியை இழுத்து தாக்கிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் கார்த்திகேயன், ரதிமீனா ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story