நிலத்தகராறில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு

நிலத்தகராறில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள மப்பேடு அந்தோனியார்புரம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி விக்டோரியா (வயது 37). விக்டோரியாவுக்கு பண்ணூர் பீமாவரம் பகுதியில் நிலம் உள்ளது. அந்த இடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சுற்றுச்சுவர் அமைத்தார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த மேரி என்பவர் அந்த சுற்றுச்சுவரை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மேரியிடம் கேட்டபோது விக்டோரியாவை தகாத வார்த்தையால் பேசிய மேரி அவருக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விக்டோரியா மப்பேடு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் இது சம்பந்தமாக மேரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story






