சிறுமியை கர்ப்பமாக்கிய ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு


சிறுமியை கர்ப்பமாக்கிய ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு
x

கே.வி.குப்பம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வேலூர்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த மோகன்தாஸ் என்பவருக்கும் இடைேய பழக்கம் இருந்துள்ளது. அப்போது அவர் ஆசைவார்த்தைகள் கூறி சிறுமியுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இந்த நிலையில் மோகன்தாஸ் ராணுவத்திற்கு தேர்வு செய்யப்பட்டு தற்போது அசாம் மாநிலத்தில் ராணுவ பயிற்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

மோகன்தாஸ் உடன் நெருக்கமாக இருந்ததால் அந்த சிறுமி தற்போது கர்ப்பமாக உள்ளாள். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் மோகன்தாஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story