இளம்பெண்ணை வீடு புகுந்து தாக்கிய வாலிபர் மீது வழக்கு


இளம்பெண்ணை வீடு புகுந்து தாக்கிய வாலிபர் மீது வழக்கு
x

கோவையில் திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணை வீடு புகுந்து தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோயம்புத்தூர்


கோவையில் திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணை வீடு புகுந்து தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இளம்பெண்

கோவை ரத்தினபுரியை சேர்ந்த 21 வயது இளம்பெண் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு செட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். அப்போது அங்கு வேலை செய்த அப்துல் பாசித் (வயது 27) என்பவர் அந்த இளம்பெண்ணிடம் அடிக்கடி பேசி வந்தார்.பின்னர் திடீரென்று அவர் அந்த இளம்பெண்ணிடம் நான் உன்னை காதலிக்கிறேன், நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டு உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், அவரிடம் பேசுவதையும் தவிர்த்து வந்துள்ளார்.

வீடு புகுந்து தாக்குதல்

இதனால் ஆத்திரம் அடைந்த அப்துல் பாசித், ரத்தினபுரியில் உள்ள அந்த இளம்பெண் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த இளம்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி உள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், அந்த இளம்பெண்ணை அடித்து உதைத்தார்.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் பெற்றோர், அவரை தடுக்க முயன்றனர். உடனே பெற்றோரையும், அந்த இளம்பெண்ணையும் மிரட்டிவிட்டு அப்துல் பாசித் அங்கிருந்து சென்றார். இந்த நிலையில் மீண்டும் அந்த இளம்பெண் செல்போனில் தொடர்பு கொண்ட அவர், தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் வேறு யாரையும் உன்னை திருமணம் செய்ய விடமாட்டேன் என்று மிரட்டி உள்ளார்.

போலீசார் விசாரணை

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அந்த இளம்பெண் ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story