பற்கள் பிடுங்கிய விவகாரம்: சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது


பற்கள் பிடுங்கிய விவகாரம்: சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது
x

பற்கள் பிடுங்கிய விவகாரம்: சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது.

நெல்லை,

நெல்லை மாவட்டம் அம்பை காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றி தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டார். இதில், விசாரணை அதிகாரியாக நெல்லை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகராணி நியமிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பொன் ரகு, இந்த வழக்கு ஆவணங்களை நேற்று சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் உலகராணியிடம் ஒப்படைத்தார். இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜ், இன்ஸ்பெக்டர் உலகராணி உள்பட 10 பேர் கொண்ட குழு நேற்று இரவு 7.30 மணியளவில் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு சென்று விசாரணையை தொடங்கினர். அங்கு கல்லிடைக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் வரவழைக்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தினார்கள். சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணையால் இந்த வழக்கு மேலும் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.


Next Story