தியாகதுருகம் அருகே சாலையில் தானியங்கள் காயவைத்த 2 பேர் மீது வழக்கு


தியாகதுருகம் அருகே சாலையில் தானியங்கள் காயவைத்த 2 பேர் மீது வழக்கு
x

தியாகதுருகம் அருகே சாலையில் தானியங்கள் காயவைத்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் சு.ஒகையூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விருகாவூரில் இருந்து அடரி செல்லும் சாலையில் ஈயனூர் அருகே தானியங்களை காய வைத்திருந்த அதே கிராமத்தை சேர்ந்த சேகர் (வயது 45) என்பவர் மீதும், மேட்டுக்காலனி பகுதியில் தானியங்களை சாலையில் காயவைத்திருந்த வேளாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கலைமணி (46) என்பவர் மீதும், போக்குவரத்துக்கு இடையூறாக தானியங்களை சாலையில் காயவைத்ததாக போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story