மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 30 பேர் மீது வழக்கு
மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை
ஆலங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து மின்சார வாரிய ஊழியர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இறந்த ஊழியருக்கு நிவாரணம் வழங்கக்கோரியும், குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருவரங்குளம் ஒன்றிய செயலாளர் அம்பேத்வளன், குப்பகுடியை சேர்ந்த சேகர் ஆகியோர் தலைமையில் 10 பெண்கள் உள்பட 30 பேர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து புதுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ராகவி உத்தரவின் பேரில், அனுமதியின்றி மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story