வெள்ளாற்றில் மணல் அள்ளியவர் மீது வழக்கு
வெள்ளாற்றில் மணல் அள்ளியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெள்ளாற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, வி.களத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் பூங்கொடி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பசும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 22) என்பவர் தனது மாட்டு வண்டியில் வெள்ளாற்றில் மணல் அள்ளிக்கொண்டு இருந்தார். போலீசாரை கண்டதும் அவர் மாட்டுவண்டியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினார். இதையடுத்து, போலீசார் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய விஜயை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story