வீடு புகுந்து பணம் திருட்டு-வாலிபர் மீது வழக்கு


வீடு புகுந்து பணம் திருட்டு-வாலிபர் மீது வழக்கு
x
தினத்தந்தி 13 Feb 2023 9:06 PM GMT (Updated: 2023-02-14T15:53:54+05:30)

வீடு புகுந்து பணம் திருடியதாக பவாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது:.

சேலம்

கெங்கவல்லி:

கெங்கவல்லி அருகே கடம்பூர் ஊராட்சி பாரதிபுரத்தை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 42). விவசாய கூலித்தொழிலாளி. இவர் தனது குடும்பத்துடன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஓட்டை பிரித்து ஒருவர் உள்ளே குதித்துள்ளார். உடனே விழித்துக்கொண்ட பழனிவேல், அந்த நபரை பிடித்து விசாரித்தார். விசாரணையில் அந்த நபர் கடம்பூர் மூப்பனார் கோவில் தெருவை சேர்ந்த மணிவேல் என்பவரின் மகன் அரசு (19) என்பது தெரிய வந்தது. உடனே அவரை அவரது உறவினரிடம் பழனிவேல் ஒப்படைத்தார்.

இந்த நிலையில் நேற்று வீட்டின் பீரோவை திறந்து பார்த்த போது, அதில் இருந்த ரூ.84 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் கெங்கவல்லி போலீசார், அரசு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.


Next Story