குறுவட்ட அளவிலான கபடி போட்டி


குறுவட்ட அளவிலான கபடி போட்டி
x

குறுவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் குறுவட்ட அளவிலான மகளிர் கபடி போட்டி நடைபெற்றது. போட்டியை பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர்கள் பிரபாகரன், அருள்மொழி மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் முன்னிலை வகித்தனர். போட்டிகளில் வட்டாரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினார்கள். இப்போட்டியில் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், வி.களத்தூர் அரசு பள்ளி 2-வது இடமும், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் அரும்பாவூர் அரசு பள்ளி முதலிடமும், வேப்பந்தட்டை அரசு பள்ளி 2-வது இடமும், 18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் வெண்பாவூர் அரசு பள்ளி முதலிடமும், அரும்பாவூர் பள்ளி 2-வது இடமும் பிடித்து சாதனை படைத்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விசுவநாதன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.


Next Story