குறுவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி


குறுவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி
x

குறுவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி நடந்தது.

கரூர்

பள்ளிக்கல்வி துறை சார்பில் கிருஷ்ணராயபுரம் குறுவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி லாலாபேட்டையில் நடந்தது. இதற்கு லாலாபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஜெயபால் தலைமை தாங்கினார். தனியார் பள்ளி தாளாளர் மரியா, காணியாளம்பட்டி அரசு மேல்நிலை பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் சந்திரசேகர், சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தார்.

போட்டியை லாலாபேட்டை தனியார் பள்ளி முதல்வர் தண்டாயுதபாணி தொடங்கி வைத்தார். இதில் 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவ-மாணவிகள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் பங்கு பெற்று விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகள் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டியில் விளையாட தகுதி பெற்றனர்.


Next Story