குறுவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டி


குறுவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டி
x

குறுவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டி நடந்தது.

கரூர்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் குறுவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டி மேட்டு திருக்காம்புலியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில், 8 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டி பல்வேறு சுற்றுகளாக மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக நடைபெற்றது. போட்டியை திருக்காம்புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன், பள்ளி தலைமையாசிரியர் கனகராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், 14-17 வயதிற்குட்பட்ட மாணவ-மாணவிகள் பிரிவில் மேட்டு திருக்காம்புலியூர் அரசு உயர்நிலைப்பள்ளி முதலிடத்தையும், 19 வயதிற்கு உட்பட்ட மாணவ-மாணவிகள் பிரிவில் கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும் பிடித்தனர். இதையடுத்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சதீஷ், அமுதா ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story