குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டி


குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டி
x

அய்யர்மலையில் குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.

கரூர்

சதுரங்க போட்டி

கரூர் மாவட்டம், அய்யர்மலை பகுதியில் உள்ள தனியார்பள்ளி ஒன்றில் குறுவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சதுரங்க போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயலட்சுமி பார்வையிட்டார்.

இந்த சதுரங்க போட்டியில் குளித்தலை குறுவட்ட அளவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, அரசு ஆண்கள், பெண்கள் உயர்நிலை, மேல்நிலை மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 58 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

பல்வேறு பிரிவாக நடந்த இந்த போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். இதில் பெரும்பாலும் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் அதிக அளவில் வெற்றி பெற்று உள்ளனர்.

மாவட்ட போட்டிக்கு தகுதி

அனைத்து பிரிவுகளிலும் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இதில் போட்டிகளுக்கு நடுவர்களாக தனியார் பள்ளி தாளாளர் மணிவேல், அரசு பள்ளி உடற்கல்வி இயக்குனர் ராஜசேகர், உடற்கல்வி ஆசிரியர்கள் தனபால், ஜெயபிரகாஷ், அமலாலெனின் இளவரசி, ஆனந்த் உள்ளிட்டோர் செயல்பட்டனர்.


Next Story