குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டி
குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடந்தது.
அரவக்குறிச்சி அருகே உள்ள ஈசநத்தம் ஹாஜி மீரா அகாடமி மாடல் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் குறுவட்ட அளவிலான கோ-கோ விளையாட்டு நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் பாவாஜான் தலைமை தாங்கினார். குறுவட்டச் செயலாளர் ஈசநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மருதைவீரன் முன்னிலை வகித்தார். போட்டியை ஈசநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி தொடங்கி வைத்தார்.
இதில் 15-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், ஈசநத்தம் ஹாஜி மீரா பள்ளி 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான பிரிவில் முதலிடமும், 14 வயதுக்குட்பட்ட ஆண்கள்-பெண்கள் பிரிவுகள், 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் 2-வது இடமும் பிடித்து சாதனை படைத்தனர். முதலிடம் பெற்ற மாணவிகள் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். முடிவில் பள்ளி முதல்வர் சக்தி நன்றி கூறினார்.